St.Therese

Church Photo

செய்திகள் தற்பொழுது ஏதுமில்லை...!

செய்தி & நிகழ்ச்சிகள்

எமது ஆலயத்தைப் பற்றி - கண்டன்விளை தலத் திருச்சபை

  • இந்தியாவில் ரோமை கத்தோலிக்கம்

    இந்திய கிறிஸ்தவ சமூகத்தில் உரோமன் கத்தோலிக்கர் தாம் எண்ணிக்கையில் அதிகம். போர்த்துக்கீசியரின் ஆதரவாலும் இயேசு சபையினரின் தன்னலமற்ற அயரா உழைப்பினாலும் பிற சமயத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு அதிகமாக மதம் மாறிக்கொண்டிருந்தனர், இத்தகைய மத மாற்றத்தால், இந்தியாவிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் கத்தோலிக்க மறை மாவட்டமாகக் கோட்டாறு மறை மாவட்டம் விளங்கியது. கிறிஸ்துவின் சீடர்களில் ஒரவரான புனித தோமையார் (கி.பி 52 - 68) இந்தியாவிற்கு வந்து முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவத்தை அறிமுகம் செய்து வைத்தார். 1498 - இல் அல்மேய்டா என்பவர் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடித்தது முதல் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குப் புதிய காலக்கட்டம் உருவானது. 1534 - ஆம் ஆண்டு திருத்தந்தை 3 - ஆம் பவுல் கோவா மறைமாவட்டத்தை உருவாக்கி அதை கீழை நாடுகளின் தலைமை இடமாக அமைத்த்தார்.

    ஐரோப்பாவில் கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் தோன்றிய போது, புனித இஞ்ஞாசியார் திருச்சபையைப் புதுப்பிப்பதற்காகவும் அன்றைய கிறிஸ்தவர்களின் தவறான போக்குகளைத் திருத்துவதற்காகவும் முனைந்தார். 1539 - ஆம் ஆண்டு புதிய ஒரு துறவற சபையை நிறுவுவதற்கான அனுமதியைத் திருத்தந்தை வழங்கினார். இங்ஙனம் 1540 - ஆம் ஆண்டு "இயேசு சபை" உருவானது. புனித இஞ்ஞாசியார் இந்த சபைக்கான ஒழுங்கு முறைகளையும் சட்டத்திட்டங்களையும் உருவாக்கினார்.

    இயேசு சபையினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு தங்களுடைய குருக்கள் மெய்யியலிலும், இறையியலிலும் நீண்டகாலம் பயிற்சிகள் பெற வேண்டுமென்று பணித்தார். இது, பேரறிஞர் பலரை உருவாக்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதைச் சுற்றிய தீவுகளிலும் நற்செய்தி அறிவிப்பின் முன்னோடியாகத் திகழ்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார், கத்தோலிக்க மறுமலர்ச்சியின் விடிவெள்ளியாகவும், இயேசு சபையின் சிறந்த செயல்வீரராகவும் விளங்கினார். தூய சவேரியார் பத்து ஆண்டுகளே (1542 - 1552) கீழை நாடுகளில் பணிபுரிந்தார். ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் கிறிஸ்தவத்தைப் பல இடங்களில் பரப்பினார். கிறிஸ்தவ விசுவாசத்தை ஜப்பானிலும் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் மக்களுக்கு மறைக்கல்வி புகட்டவும், ஜெபங்களை கற்பிக்கவும் அவர்களுடைய மொழியைப் பயின்றார். குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார். குழந்தைகளை தங்கள் பெற்றோருக்கு கல்வி புகட்டத் தூண்டினார். பல கிராமத்து மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். வேதியர்களை நியமித்து அவர்களுக்குத் தொடர் பயிற்சியும் வழங்கினார். அவரது அயரா உழைப்பினால் பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. புனித சவேரியாரே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்காகக் கோட்டாற்றுக்கு வந்தார். சீனாவிற்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். கோட்டாற்றில் அமைந்துள்ள பேராலயம் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் தென்னிந்திய கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.

    புனித குழந்தை இயேசு தெரசாளை பாதுகாவலியாகக் கொண்ட கண்டன்விளை பங்கும் கோட்டாறு மறைவாட்டத்திற்குட்பட்டதாகும் (2014, டிசம்பர் 22 - ஆம் நாளிலிருந்து குழித்துறை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).

  • தினசரி திருப்பலி மற்றும் ஜெபம்

    வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6:15 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்கள் ஆலயத்திற்கு வந்து பக்தி முயற்சிகளிலும், ஜெபங்களிலும் பங்கெடுத்து விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

  • வாரநாள் வழிபாடுகள்

    ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி காலை 7:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது. பங்கு மக்கள் திருப்பலியில் பங்கேற்பது அவர்களது ஆன்மீகக் கடமை. திங்கட்கிழமை தோறும் மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஜெபக்குழு நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2:30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் மாலை 6:16 மணிக்கு ஜெபமாலையும், புனித குழந்தை தெரசாவின் நவநாள் திருப்பலியும் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலயத்தில் வைத்து ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. பங்கு மக்கள் பலிபீடம் மற்றும் வாசகப்பீடத்தை அலங்கரிப்பதிலும், மையச்சிந்தனையை எழுதி வைத்தல் போன்ற பல காரியங்களைச் செய்வதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். மதம், ஜாதி, இனம் இவற்றைக் கடந்து மனித இனத்தின் ஒருமைப் பாட்டிற்காக ஜெபங்கள் ஜெபிக்கப்படுகின்றன.

  • மாதாந்திர விழாக்கள்

    மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 6:15 மணிக்கு ஜெபமாலை மலையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. முதல் சனிக்கிழமை தவிர, மற்ற சனிக்கிழமைகளில் (2, 3, 4 மற்றும் 5) காலை 6:15 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருமுழுக்குத் திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை நற்செய்திக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.

  • வழிப்பாட்டு ஆண்டின் வழிப்பாடுகள்

    ஒவ்வொரு டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு நற்கருணை எழுந்தேற்றம் செய்து வைத்து, கடந்த ஓராண்டு காலமும் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றியாகவும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியும் ஜெப வழிபாடு நடத்தப்பட்டு ஆசீர் வழங்கப்படும். தொடர்ந்து புத்தாண்டு திருப்பலி சிறப்பாகக் கொண்டாடப்படும். புத்தாண்டு அன்று காலை, 7:00 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் இறையாசீர் பெற இறைமக்கள் பெருந்திரளாக வருகின்றனர். அதைத் தொடர்ந்து பல சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ஜனவரி 14 - ஆம் நாள் "அறுவடை விழா" என்ற பெயரில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அன்று திருச்சபை நிலத்தில் நிறைவான விளைச்சலையும், அறுவடையையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல கூடி வருகின்றனர். ஜனவரி 26 - ஆம் நாள் இந்திய குடியரசு தினம் நாட்டுப்பற்றை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    பெப்ரவரி 2 - ஆம் நாள் ஆண்டவர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெப்ரவரி 11 - ஆம் நாள் லூர்து அன்னை திருவிழா; அந்நாளில், மெழுகுதிரி பவனியும், கெபியில் திருப்பலியும் நடைபெறும்.

    திருநீற்றுப் புதன் தவக்காலத் துவக்கமாக அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில், மக்கள் ஜெபம், தவம், தானம் ஆகியவைகளில் ஈடுபடுகின்றனர். பெரிய வெள்ளிக்கிழமை திருச்சடங்குகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நற்கருணை ஆராதனை, திருச்சிலுவை ஆராதனை முதலியவற்றில் மக்கள் உருக்கமாக பங்கெடுத்து வருகின்றனர். உயிர்ப்பு ஞாயிறு, கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மே மாதம் 1 - ஆம் நாள், புனித சூசையப்பர் திருவிழாவாகவும், தொழிலாளர் தினமாகவும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆகஸ்ட் திங்கள் 15 - ஆம் நாள் அன்னையின் விண்ணேற்புத் தினமாகவும், இந்தியாவின் சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் இறுதிவாரம் மிக முக்கியமானது; என்னவென்றால், மாக்கள் கூடிவந்து மகிழ்வர். அக்டோபர் மாதம் மறைபரப்புப் பணிக்காக ஞாயிறன்று சிறப்புக் காணிக்கைப் பிரிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி நமது வாழ்வுக்குச் சிறந்த மாதிரியாகத் திகழ்கின்ற அனைத்துப் புனிதர்களுடைய விழா சிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 2 - ஆம் தேதி கொண்டாடப்படும் இறந்த அனைவரின் நினைவுநாள் மனித வாழ்க்கையின் நிலையாமையை மட்டுமல்ல, இறப்புக்குப் பின் வரும் உயிர்ப்பையும் நினைவுப்படுத்துகிறது. அன்று கல்லறைத் தோட்டத்தில், சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கல்லறைகளும் மந்திரிக்கப்படுகின்றன. டிசம்பர் 8 - ஆம் நாள் அமல அன்னையின் திருவிழா கெபியில் ஜெபமாலை மற்றும் பவனியுடன் சிறப்பிக்கப்படுகிறது. டிசம்பர் 25 - ஆம் நாள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் மக்கள் பெருந்திரளாகப் பங்கெடுக்கின்றனர். அற்புதமான குடில்களும், அழகுற அமைக்கப்பட்டுள்ள விளக்குகளும், மக்களுடைய இல்லத்தில் ஆட்சிபுரியும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவைகளுக்கு முன் அடையாளமாகத் திகழ்கின்றன.

  • கண்டன்விளை பங்கு அமைவிடம்

    75 ஆண்டுகளுக்கு முன்னர், கண்டன்விளை பங்கு கொல்லம் மறைமாவத்தின் கீழ் காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அவ்வமயம், திரு. பாக்கிய நாதன் என்பவர் தலைமையில் மறைமாவட்டத்திற்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில், கண்டன்விளையில் ஒரு ஆலயம் கட்ட வேண்டுமென அப்போதைய கொல்லம் ஆயர் பேரருட் பெருந்தகை ஆலோஷியஸ் மரிய பென்சிகர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ்விண்ணப்பத்தை ஆயர் அவர்கள் ஏற்றுக்கொண்டு காரங்காடு பங்குத்தந்தையோடு இணைந்து கண்டன்விளையில் ஆலயம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்காகக் கண்டன்விளைக்கு வந்தார்.

    பல இடங்களைப் பார்வையிட்டார்; அவைகளில் பெரும்பாலானப் பகுதிகள் மிகவும் தாழ்வானப் பகுதிகளாகவும், மழைக்காலங்களில் நீர்தேங்கும் பகுதிகளாகவும் தென்பட்டன. இறுதியில், ஓரிடத்தைத் தேர்வு செய்தார். ஆயர் கனவில் கண்டதும் தேர்வு செய்ததும் ஒரே இடமாக இருந்தது. ஆயர், பங்குத்தந்தை மற்றும் மக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ந்து அவ்விடத்தை உறுதி செய்தனர்; அதுவே, கண்டன்விளை என்பதாகும்.

    1923 - ஆம் ஆண்டு ஆயர் அவர்கள் புனித குழந்தை தெரசாவின் அருளாளர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு திருத்தந்தை 11 - ஆம் பயஸ் அவர்களிடம், குழந்தை தெரசாவின் பெயரால் ஒரு ஆலயம் எழுப்பப்பட விண்ணப்பித்தார். அதனடிப்படையில், கண்டன்விளையில் கட்டி எழுப்பப்பட்டிருந்த சிறிய ஆலயத்தை 1924 - ஆம் ஆண்டு ஏப்ரல் 7 - ஆம் தேதி அர்ச்சித்து புனித தெரசாளுக்காக அர்ப்பணித்தார். 1925 - ஆம் ஆண்டு மே மாதம் 17 - ஆம் நாள் குழந்தை தெரசாவைப் புனிதையாக அறிவிக்கப்பட்ட நாளன்று திருப்பலியின் போது, புனித குழந்தை தெரசாள் அருளாளர் பட்டம் பெற்றபின் அவரது பெயரால் அமைக்கப்பட்ட முதல் ஆலயம், கொல்லம் மறைமாவட்டத்திற்குட்பட்ட (2014, டிசம்பர் 22 - ஆம் நாளிலிருந்து குழித்துறை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) கண்டன்விளையில் அமைந்துள்ள ஆலயம்தான் என அறிவித்து கண்டன்விளையை உலகறியச் செய்தார்.

  • ஆலய கட்டுமானப் பணி

    அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா அவர்களின் தலைமையில் ஆலயம் கட்டும் பணி 1927 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தொடக்கத்தில் 61/2 அடி நீளமும் 31/2 அடி அகலமும் கொண்ட அடித்தளம் இடப்பட்டது. கட்டுமான அடித்தளம் பணியில், தலைமைப்பணியாளராகத் திகழ்ந்தவர் திரு. ஆலோஷியஸ் என்பவர் ஆவர். கல்லடித்தட்டு விளையச் சேர்ந்த திரு. ஞாப்பிரகாசம் என்பவர் நன்கொடையாக நல்கிய 27 அடி நீளமுடைய ஒரே பனைமர உத்திரம் கூரைக்கு பயன்பத்தப்பட்டது. அவரது நினைவாக, அவருடைய பெயரின் சுருக்கெழுத்துக்கள் (D.G) என்று உத்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. கட்டடம் உறுதியாக இருக்கும் பொருட்டு, சுண்ணாம்பு, பதநீர் கலந்த கலவை சாந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டாரவிளையைச் சார்ந்த திரு. கபிரியேல் பீடத்தின் தூண்களுக்கு நன்கொடை வழங்கினார். கட்டுமானப் பணியாளரான திரு. அலங்கார் என்பவர், தம்முடைய தனித்திறமையை கட்டுமானப் பணியில் காட்டினார். சித்தன்தோப்பைச் சார்ந்த திரு. மாசிலாமணி பண்டாரவிளையச் சார்ந்த திரு. வறுவேல், திரு. கபிரியேல் மற்றும் திரு. மரியஞானம் என்பவர்கள் பாண்டிச்சேரியிலும், அண்டை ஊர்களிலும் நன்கொடைப் பிரித்துத் தாராளமாக வழங்கியதால் கட்டுமானப் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

    பிற ஜாதியினர், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டக் காலத்தில் பல இனத்தவர்களும் இந்த ஆலய கட்டுமானப் பணிக்கு துணை புரிந்தனர். கிருஷ்ணன் வகையைச் சார்ந்த திரு. மகேஸ்வரன் பல பனைமரங்களை நன்கொடையாக வழங்கினார். மீனவர்கள் மகிழ்ச்சியாக நிறைவாகக் கொடுத்து குழந்தை தெரசாவைக் "கடல்களின் அரசி" என்று அழைத்தனர். பணியாட்களும், தங்களால் இயன்ற நன்கொடைகளைக் கொடுத்தனர். திருவிழா நாட்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு தேரினை அன்பளிப்பாகக் கொடுத்தனர். சித்தன்தோப்பைச் சார்ந்த தச்சுத் தொழில் செய்பவர்களும், பிறரும் ஆலயத்திற்கு ஒரு பெரிய தேரினை அன்பளிப்பாக வழங்கினர். சித்தன்தோப்பு மற்றும் பண்டாரவிளை இறைமக்கள் ஆலய கட்டுமான பணிக்காக நன்றி நிறைந்த நெஞ்சோடு தாராளமாக நன்கொடைகள் வழங்கினர்.

  • ஆலய கட்டுமான பணி நிறைவு

    ஆலயக்கட்டுமான பணியானது 18 மாதங்களில் நிறைவு பெற்றது. ஆலயத்தின் தரை மற்றும் கூரைக்குத் தேவையான ஓடுகளை 8 ஓடு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இனாமாக வழங்கினார்கள். கல் வேலைப்பாடுகளைக், கண்டன்விளை மக்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.

    1929 - ஆம் ஆண்டு ஆலயத்தின் முதற்கட்டப் பணியானது நிறைவுற்றது. இதே ஆண்டு ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. இங்ஙனம் புனித குழந்தை இயேசுவின் தெரசா பெயரில் உலகிலேயே முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கண்டன்விளை ஆலயம் ஆகும். இது காரங்காடு பங்கின் கிளைப்பங்காக நிறுவப்பட்டது.

    1929 - 1944 வரை அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா, வர்க்கீஸ், D.C. ஆன்றனி முதலானோர் பங்கு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் அக்கறை காட்டினர். 1944 - ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 - ஆம் நாள் கண்டன்விளை தனிப்பங்காக நிலை உயர்த்தப்பட்டது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக, அருட்தந்தை. V.J. ஸ்டீபன் அவர்கள் பணியேற்றார்.

    இந்த ஆலயம்தான், புனித தெரசாள் அருளாளராக பிரகடனப் படுத்தப்பட்டபின் முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் புனித தெரசாளின் உடன் பணியாற்றிய கார்மல் சபையைச் சார்ந்த அருட்சகோதரியரும், புனித குழந்தை தெரசாள் பிறந்த லிசியேவிலுள்ள மக்களும் 2 ஆலய மணிகளை அன்பளிப்பாக கொடுத்தனர். அதில் கீழ்கண்ட வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன:

    Michiels A.Tournai 1931: என்னுடைய பெயர் குழந்தை இயேசுவின் தெரசா. நான் இந்திய மக்கள் அனைவரையும் கண்டன்விளைக்குக் கூட்டிச் சேர்ப்பேன்.

    Michiels A.Tournai Fondeur என்னுடைய பெயர் சிலுவை யோவான். விண்ணில் இருக்கும் என் சகோதரி புனித குழந்தை இயேசுவின் தெரசாவின் மகிமைக்காக நான் ஒலித்திக் கொண்டிருப்பேன்.

    இந்த மணிகள் ஆலயத்தின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள மணிக்கோபுரத்தின் இடப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இது புனித தெரசா இந்தியாவிலுள்ள அனைவரையும் கண்டன்விளையில் கூட்டிச் சேர்த்து அவர்களுக்கு குழந்தை இயேசுவின் தெரசாவின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.

    ஆலயத்தின் வடக்குப் பகுதியில் இறை அன்னை லூர்து நகரில் பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்ததன் நினைவாக, அழகிய கெபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெபி, 1945 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. புனித லூர்து அன்னையின் விழா அன்றும், அமலோற்பவ அன்னை திருவிழா அன்றும், கெபியில் சிறப்புத் திருப்பலிகள் கொண்டாடப்படுகின்றன.

    இவ்வாலயத்தின் மற்றுமொரு சிறப்பு யாதெனில், ஒரே கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு செதுக்கப்பட்ட 50 அடி உயர கொடிமரம். இந்தச் சீரிய பணியை, பருத்திவிளையைச் சேர்ந்த கல் தொழிலாளர்கள் செய்து முடித்தனர். இந்த கொடிமரம், அருட்தந்தை. V.J. ஸ்டீபன் அவர்களின் காலத்தில், 1948 - ஆம் ஆண்டு 24 - ஆம் நாள் பயன்பாட்டிற்கு வந்தது.

    1949 - ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை பயஸ் J. மோரீஸ் அவர்கள் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நிலம் வாங்கி அதை ஜெபமாலை மலை என்று அழைத்தார். பிற்காலத்தில், அருட்தந்தை. V. ஹில்லாரியஸ் அங்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்பினார். 2000 - ஆம் ஆண்டு மாபெரும் யூபிலி கொண்டாட்டத்தின் போது அருட்தந்தை. S. இயேசு ரெத்தினம் அவர்கள் அந்த நினைவு மண்டபத்தை அகற்றி சிற்றாலயம் ஒன்றைக் கட்டத் துவங்கினார்.

    அருட்தந்தையர்கள் மரியமிக்கேல், வின்சென்ட்ராஜ் ஆகியோர் காலத்தில் கட்டடப்பணி தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. பங்கு மக்களின் தாராள நன்கொடையால் ஜெபமாலை மலையின் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. இந்த ஜெபமாலை மலையிலிருந்து பார்க்கும் போது அருகில் அமைந்துள்ள மலைத்தொடர்களும், தென்னை மரத்தோப்புகளும், முட்டத்தில் இருக்கும் அரபிக் கடலும் பார்பவர்கள் கண்களுக்குப் பரவசமூட்டும். ஜெபமாலை மலைக்குச் செல்லும் வழிப்பகுதியில், சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் அருமையாக பொறிக்கப்பட்டுள்ளன.

    ஆலயத்தின் தென்பகுதியிலுள்ள சாலை ஓரத்தில் இறைமக்களின் பக்தியை வளர்க்கும் அழகிய குருசடி ஒன்றை அருட்தந்தை. பெனடிட் J.R. அலெக்சாண்டர் அவர்கள் 1967 - ஆம் ஆண்டு நிறுவினார்.

  • 1968 - ல் ஆலயம் புதுப்பித்தல்

    1968 - ஆம் ஆண்டு அருட்தந்தை. M. மரிய கிரகோரி அவர்கள், ஆலயத்தின் தலைவாயில் பகுதியை அடித்தளம் மற்றும் கல்லிலான தூண்களை அமைத்து விரிவுப்படுத்தினார். உடல் பலவீனக் காரணத்தால், அவர் பங்கின் பொறுப்பிலிருந்து 1972 - ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றார். அவரைத் தொடர்ந்து, அருட்தந்தை. C.N. வென்சஸ்லாஸ் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று அருட்தந்தை. M. மரிய கிரகோரி விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்தார்.

    1976 - ஆம் ஆண்டு அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ் அவர்கள் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அவரது பணிக்காலத்தில், ஆலயத்தின் தலைவாயிலின் விரிவாக்கமும் கோபுரமும் முடிக்கப்பட்டு, 1979 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. இதன் மூலம், ஆலயத்தின் 2 - ஆம் கட்ட கட்டடப் பணியானது நிறைவுப்பெற்றது.

    அருட்தந்தை. M. அருள் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபொழுது, பங்குமேய்ப்புப்பணிக் குழு மற்றும் பங்கில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கத்தோலிக்கச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆலயத்தின் மேற்கு ஓரமாக சிறுமலர் கலையரங்கத்தை 1991 - ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இவ்வரங்கானது, ஜெபவழிபாடு, ஆலய சம்மந்தமான பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழா காலங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பங்கு மக்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் இன்றும் பயன்பட்டு வருகிறது.

  • 1992 - முதல் 2002 வரையுள்ள புனரமைப்பு

    1992 - ஆம் ஆண்டு பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை. S. சாலமன் அவர்கள் மக்களின் தாராள மனதைத் தட்டி எழுப்பி நன்கொடைகளைப் பெற்று ஆலயத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை புனரமைத்தார்; மேலும், வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களைக் கட்டி முடித்து 1994 - ஆம் ஆண்டு செப்டம்பர் 23 - இல் அன்றைய கோட்டாறு ஆயர் மேதகு. லியோண் A. தர்மராஜ் அவர்களின் தலைமையில் அர்ச்சிப்பு விழாவும் நடத்தினார்.

    பங்கு சார்ந்த பொதுநிகழ்ச்சிகள், திருமணம் மற்றும் கலைநிழ்ச்சிகள் நடைபெறும் வண்ணம், ஆலயத்திற்கு சொந்தமாக ஒரு கலையரங்கம் அமைப்பது தொடர்பாக 1996 - ஆம் ஆண்டு ஒரு சுமுகமான தீர்மானம் பங்குப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பொருட்டு, அருட்தந்தை. B. ரசல்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் 1997 - ஆம் ஆண்டு தூய தெரஸ் அரங்கின் கட்டடப் பணியானது ஆரம்பிக்கப்பட்டு, அருட்தந்தையர்கள் S. இயேசுரெத்தினம் மற்றும் F. மரியமிக்கேல் ஆகியோர்களின் பெரும் முயற்சியால் 2002 - ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

    ஆலயத் திருவிழா 9 - ஆம் நாள் மாலையில், இயேசுவின் திருவுருவம், அன்னை மரியாள் மற்றும் திருச்சிலுவை ஆகியவைகளைத் தாங்கி நிற்கும் இரு தேர்கள், மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் மிகவும் அருமையாக அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்படும்; இந்த பவனியானது, குடும்ப விழாவான 10 - ஆம் திருவிழா திருப்பலியின் பிறகும் தொடர்ந்து பவனியாக ஆலயத்தைச் சுற்றி எடுத்துவரப்படுகிறது. பவனியில் கலந்துகொள்ளும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறுப் பகுதியிலுள்ள இறைமக்கள் பலர் இறைவனின் கொடைகளை புனித தெரசாள் வழியாகப் பெற்று வருகிறார்கள். திருவிழா காலங்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்து வசதிகளும் தொன்றுதொட்டே செய்யப்பட்டு வருகிறது.

    முற்காலத்தில் பங்குமக்களின் இறுதிச்சடங்கு (நல்லடக்கம்) முறையானது, அவரவர்க்கு சொந்தமான இடங்களிலேயே நடைப்பெற்றது. பின்னர், நன்கொடை மூலம் வாங்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலப்பரபானது ஆலயத்திற்குட்பட்ட பொதுக் கல்லறைத் தோட்டமாக மாற்றப்பட்டு, இறுதிச்சடங்கானது பொதுவான சடங்கு முறையாக மாற்றும் கண்டது. ஒவொரு நவம்பர் மாதமும் 2 - ஆம் நாள், அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு இங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

  • கிளைப்பங்கு ஆலயங்கள்



    இரணியல்

    இரணியல் பங்கானது, கண்டன்விளை ஆலயம் கோட்டாறு மறைமாவட்டத்தின் ஒரு பங்காக நிலை உயர்வு பெற்ற அதே சமயம் (1944) தான் மூன்று கிறிஸ்தவ சமூகங்களுடன் கண்டன்விளையின் ஒரு கிளைப்பங்காக அறிவிக்கப்பட்டது. புனித தோமையார் இவ்வாலயத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். பிரிதி ஞாயிறு காலை 9:00 மணிக்கும், செவ்வாய்கிழமை மாலை 6:00 மணிக்கும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பங்கு அருட்பணிப்பேரவை பங்கின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கவனித்து வருகிறது.

    சித்தன்தோப்பு

    அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ், அவர்களுடைய பணிக்காலத்தில் (1976 - 1980) பண்டாரவிளைக்கு அப்பால் 250 கிறிஸ்தவ குடும்பங்கள் அடங்கிய சித்தன்தோப்பு என்ற பகுதி கண்டன்விளையின் ஒரு கிளைப்பங்காக அமைத்து ஐந்து கிறிஸ்தவ சமூகங்களுடன் செயல்பட வைத்தார். இவ்வாலயத்தில், புனித அலங்கார அன்னையை பாதுகாவலியாக ஏற்று திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பிரிதி ஞாயிறு காலை 5:30 மணிக்கும், ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 15 - ஆம் நாள் அன்னையின் விழா பத்து நாட்களாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பங்கு அருட்பணிப்பேரவை பங்கின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கவனித்து வருகிறது.

    பண்டாரவிளை

    அருட்தந்தை. J.R. பேட்ரிக் சேவியர் அவர்களுடைய பணிக்காலத்தில் (2012 - 2015), பண்டாரவிளை பங்கானது கண்டன்விளையின் புதிய கிளைப்பங்காக உருவானது. அதன்பொருட்டு, பண்டாரவிளையில் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டு 2015 - ஆம் ஆண்டு மே மாதம் 15 - ஆம் நாள் கோட்டாறு மறைமாவாட்ட ஆயர் மேதகு. பீட்டர் ரெமிஜூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு தூய ஆரோக்கிய அன்னைக்காக அற்பணிக்கப்பட்டது. தினமும் மாலை 6:00 மணிக்கு திருஜெபமாலையும், ஒவ்வொரு புதன்கிழமை மாலை 6:30 மணிக்கு திருப்பலியும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது இங்கு மூன்று அன்பியங்கள் மிகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் புனித குழந்தை இயேசு தெரசாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பங்கு ஆலயங்களின் பெயர் பட்டியல் அடங்கிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணையை எமது ஆலயம் தயாரித்துள்ளது. ஒவ்வொரு ஆலய பெயர் வரிசையின் மீதும் Mouse ஐ வைத்து, அந்தந்த ஆலயத்தின் முகவரியை அறிந்துகொள்ள முடியும்.

  • இந்தியாவில் புனித குழந்தை இயேசு தெரசாளுக்கான ஆலயங்கள் (*முகவரியை அறிய ஆலய வரிசையின் மீது Mouse ஐ வைக்கவும்.)
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    001 கண்டன்விளை கண்டன்விளை (1924) குழித்துறை தமிழ்நாடு (+91) 4651 224664
    002 காஞ்சாம்புறம் காஞ்சாம்புறம் (1972) குழித்துறை தமிழ்நாடு (+91) 4651 242456
    003 செட்டிசார்விளை (வீயனூர்) செட்டிசார்விளை (2010) குழித்துறை தமிழ்நாடு (+91) 94869 42860
    004 மணலி சூழலால் குழித்துறை தமிழ்நாடு கிளைப்பங்கு (சூழலால்)
    005 மாஞ்சாக்கோணம் மாஞ்சாக்கோணம் (2006) குழித்துறை தமிழ்நாடு (+91) 4651 355455
    006 பாலூர் பூட்டேற்றி குழித்துறை தமிழ்நாடு கிளைப்பங்கு (பூட்டேற்றி)
    007 சாந்தபுரம் (கொலங்கோடு) சிலுவைபுரம் குழித்துறை தமிழ்நாடு கிளைப்பங்கு (சிலுவைபுரம்)
    008 சிதறால் தேமானூர் குழித்துறை தமிழ்நாடு கிளைப்பங்கு (தேமானூர்)
    009 புஷ்பகிரி பாத்திமாநகர் (1966) மார்த்தாண்டம் தமிழ்நாடு ...
    010 சூரியக்கோடு சூரியக்கோடு மார்த்தாண்டம் தமிழ்நாடு (+91) 97877 64308
    011 மஞ்சாலுமூடு மஞ்சாலுமூடு தக்கலை தமிழ்நாடு (+91) 4651 286859
    012 பிலாங்காலை பிலாங்காலை தக்கலை தமிழ்நாடு (+91) 4651 248332, 248109
    013 அறுகுவிளை புதுக்குடியிருப்பு கோட்டாறு தமிழ்நாடு கிளைப்பங்கு (புதுக்குடியிருப்பு)
    014 புஷ்பவனம் புஷ்பவனம் தூத்துக்குடி தமிழ்நாடு (+91) 4637 291772, 4637 221627
    015 தூத்துக்குடி தெரஸ்புரம் தூத்துக்குடி தெரஸ்புரம் தூத்துக்குடி தமிழ்நாடு (+91) 461 2360520
    016 A வெள்ளோடு A வெள்ளோடு திண்டுக்கல் தமிழ்நாடு (+91) 451 2453743
    017 கிராஃபோர்ட் கிராஃபோர்ட் (1934) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு (+91) 431 2471889
    018 தெரெசாள்புரம் தெரெசாள்புரம் (1962) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு (+91) 431 2300150
    019 வடக்கலூர் வடக்கலூர் கும்பகோணம் தமிழ்நாடு (+91) 4328 266385
    020 சாய்பாபா காலணி சாய்பாபா காலணி ராமநாதபுரம் தமிழ்நாடு (+91) 422 2442889
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    021 மானாமதுரை மானாமதுரை சிவகங்கை தமிழ்நாடு (+91) 4574 260305
    022 புஷ்பவனம் புஷ்பவனம் சிவகங்கை தமிழ்நாடு (+91) 4561 295268
    023 செஞ்சை செஞ்சை சிவகங்கை தமிழ்நாடு (+91) 4565 250966
    024 தங்கச்சிமடம் தங்கச்சிமடம் சிவகங்கை தமிழ்நாடு ...
    025 ஹஃபீஸ்பேட் ஹஃபீஸ்பேட் வேலூர் தமிழ்நாடு (+91) 4177 230921
    026 மதுராம்பட்டு மதுராம்பட்டு வேலூர் தமிழ்நாடு (+91) 4175 206372
    027 பள்ளிகொண்டா பள்ளிகொண்டா வேலூர் தமிழ்நாடு (+91) 4171 244332
    028 தெரசாபுரம் தெரசாபுரம் வேலூர் தமிழ்நாடு (+91) 4183 292060
    029 பாப்பநல்லூர் பாப்பநல்லூர் செங்கல்பட்டு தமிழ்நாடு ...
    030 சோகண்டி சோகண்டி செங்கல்பட்டு தமிழ்நாடு (+91) 44 27493854
    031 தெரசாபுரம் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு தமிழ்நாடு ...
    032 அகரம் வளன் நகர் (கார்மல் சபை) செங்கல்பட்டு தமிழ்நாடு ...
    033 காசிமேடு காசிமேடு சென்னை - மையிலை தமிழ்நாடு (+91) 44 25951692
    034 மொரை (ஆவடி) மொரை சென்னை - மையிலை தமிழ்நாடு (+91) 91763 92826, judebp@yahoo.com
    035 செம்பியம் (பெரம்பூர்) செம்பியம் (1994) சென்னை - மையிலை தமிழ்நாடு (+91) 44 25587732
    036 ஃபிங்கர்போஸ்ட் ஃபிங்கர்போஸ்ட் (1934) ஊட்டி தமிழ்நாடு (+91) 423 2442417
    037 நஞ்சநாடு நஞ்சநாடு (1985) ஊட்டி தமிழ்நாடு (+91) 423 2550652
    038 கக்கனுர் கக்கனுர் பாண்டிச்சேரி - கடலூர் தமிழ்நாடு (+91) 4146 237295
    039 நரசிங்கனுர் நரசிங்கனுர் பாண்டிச்சேரி - கடலூர் தமிழ்நாடு ...
    040 தேன்கனிகோட்டை தேன்கனிகோட்டை தர்மபுரி தமிழ்நாடு (+91) 4347 235033, 94437 53330
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    041 கொலெப்பலூர் கொலெப்பலூர் கோயமுத்தூர் தமிழ்நாடு (+91) 4285 255450
    042 OK மண்டபம் OK மண்டபம் கோயமுத்தூர் தமிழ்நாடு ...
    043 ஃபிங்கர்போஸ்ட் ஃபிங்கர்போஸ்ட் உதகை தமிழ்நாடு
    044 நஞ்சநாடு நஞ்சநாடு உதகை தமிழ்நாடு (+91) 423 2550652
    045 செலாஸ் செலாஸ் உதகை தமிழ்நாடு (+91) 423 2284646
    046 கனக்கன்குளம் கனக்கன்குளம் கோயமுத்தூர் கேரளா ...
    047 குன்னும்புறம் கொச்சி கோட்டை கொச்சி கேரளா ...
    048 பெரும்பலம் அறூக்குட்டி கொச்சி கேரளா ...
    049 பெரும்பலம் பெரும்பலம் (2013) கொச்சி கேரளா ...
    050 அயிரம்தை அயிரம்தை ஆலப்புழை கேரளா (+91) 478 2572380
    051 கலவூர் கலவூர் ஆலப்புழை கேரளா (+91) 478 2862347
    052 மருவக்காடு மருவக்காடு ஆலப்புழை கேரளா (+91) 484 2245120
    053 கருநெச்சி கருநெச்சி பத்தேரி கேரளா ...
    054 கெலகம் கெலகம் பத்தேரி கேரளா (+91) 490 2412045
    055 மாவூர் மாவூர் கோழிக்கோடு கேரளா (+91) 495 2883289
    056 ஆர்யாடு ஆர்யாடு செங்கணாச்சேரி கேரளா (+91) 477 2258363
    057 அதிரம்புழா அதிரம்புழா செங்கணாச்சேரி கேரளா (+91) 481 2730599
    058 சுங்கபற சுங்கபற செங்கணாச்சேரி கேரளா (+91) 469 2696270
    059 கவலம் கவலம் செங்கணாச்சேரி கேரளா (+91) 477 2747458
    060 கொல்லாடு கொல்லாடு செங்கணாச்சேரி கேரளா (+91) 481 2341868
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    061 குளத்தூர் குளத்தூர் செங்கணாச்சேரி கேரளா (+91) 469 2696221
    062 மடப்பள்ளி மடப்பள்ளி செங்கணாச்சேரி கேரளா (+91) 481 2472253
    063 புனவேலி புனவேலி செங்கணாச்சேரி கேரளா (+91) 481 2415372
    064 வெள்ளயானி வெள்ளயானி செங்கணாச்சேரி கேரளா (+91) 471 2390015
    065 சிறுபுஷ்பப்பாளையம் சிறுபுஷ்பப்பாளையம் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2442347
    066 இளம்குளம் இளம்குளம் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2203290
    067 ஃபிளவர் மவுண்ட் ஃபிளவர் மவுண்ட் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2680335
    068 கொச்சி கோட்டை கொச்சி கோட்டை எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2216942
    069 கப்ரசேரி கப்ரசேரி எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2608232
    070 கவரபரம்பு கவரபரம்பு எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2453560
    071 குருமசுசேரி குருமசுசேரி எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2473655
    072 லிசியே நகர் லிசியே நகர் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 478 2813708
    073 மணப்புறம் மணப்புறம் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 478 2532245
    074 நாடெல் நாடெல் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 4829 224883
    075 புத்தென்கிருஸ் புத்தென்கிருஸ் எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2732772
    076 புதுவசேரி புதுவசேரி எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2606745
    077 திருமுடி குன்னு திருமுடி குன்னு எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 480 2732796
    078 திருக்காக்கரை திருக்காக்கரை எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2108660
    079 துறவும்கர துறவும்கர எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 484 2462263
    080 உல்லலா உல்லலா எர்ணாகுளம்-அங்கமாலி கேரளா (+91) 482 9225410
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    081 நெத்திமேடு நெத்திமேடு இடுக்கி கேரளா ...
    082 ஆனந்தபுரம் ஆனந்தபுரம் (1927) இரிஞ்ஞாலக்குடா கேரளா lfchurchanandapuram@gmail.com, (+91) 480 2881365
    083 கோட்டக்கல் கோட்டக்கல் (1998) இரிஞ்ஞாலக்குடா கேரளா (+91) 480 2891080
    084 கும்பிடி கும்பிடி (1954) இரிஞ்ஞாலக்குடா கேரளா (+91) 480 2770310
    085 வல்லர்படம் வல்லர்படம் (1973) இரிஞ்ஞாலக்குடா கேரளா ...
    086 பாறக்கடவு பாறக்கடவு (1981) இரிஞ்ஞாலக்குடா கேரளா (+91) 484 2473677
    087 பொட்டா பொட்டா (1930) இரிஞ்ஞாலக்குடா கேரளா littleflowerchurchpotta@gmail.com, (+91) 480 2701181
    088 புலிப்பரம்பு புலிப்பரம்பு (1981) இரிஞ்ஞாலக்குடா கேரளா ...
    089 மீன்குழி மீன்குழி காஞ்சிரப்பள்ளி கேரளா (+91) 4735 255408
    090 பூவம் பூவம் கண்ணூர் கேரளா (+91) 460 2227444
    091 கொடுவேலி கொடுவேலி கோதமங்கலம் கேரளா (+91) 4862 264911
    092 நெடியகாடு நெடியகாடு கோதமங்கலம் கேரளா (+91) 4862 242326
    093 பள்ளிக்கமுறி பள்ளிக்கமுறி கோதமங்கலம் கேரளா (+91) 4862 271427
    094 ஊன்னுக்கல் ஊன்னுக்கல் கோதமங்கலம் கேரளா (+91) 485 2855225
    095 கூட்டுக்கட கூட்டுக்கட (1933) கோட்டபுரம் கேரளா (+91) 484 2518062
    096 குமரநல்லூர் குமரநல்லூர் கோட்டயம் கேரளா (+91) 481 2597194
    097 மஞ்சூர் மஞ்சூர் கோட்டயம் கேரளா (+91) 4829 242958
    098 மெமுரி மெமுரி கோட்டயம் கேரளா (+91) 4829 242330
    099 ஒத்தேர ஒத்தேர கோட்டயம் கேரளா ...
    100 ரன்னி ரன்னி கோட்டயம் கேரளா (+91) 4735 226808
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    101 அடுத்தலா அடுத்தலா மாவேலிக்கரை கேரளா ...
    102 எடப்பொன் எடப்பொன் மாவேலிக்கரை கேரளா ...
    103 குண்டரா குண்டரா மாவேலிக்கரை கேரளா (+91) 474 2524970
    104 பண்டநாடு பண்டநாடு மாவேலிக்கரை கேரளா ...
    105 பெரிங்கல பெரிங்கல மாவேலிக்கரை கேரளா ...
    106 கோட்டூர் தச்சன்கோடு நெய்யாற்றங்கரை கேரளா கிளைப்பங்கு (தச்சன்கோடு)
    107 மாணிக்கபுரம் மாணிக்கபுரம் நெய்யாற்றங்கரை கேரளா (+91) 472 2898944
    108 பூவாத்தூர் தண்ணிமூடு நெய்யாற்றங்கரை கேரளா கிளைப்பங்கு (தண்ணிமூடு)
    109 கல்லம்பலம் பதம்கல்லு நெய்யாற்றங்கரை கேரளா ...
    110 குட்டிமூடு வாமனபுரம் நெய்யாற்றங்கரை கேரளா கிளைப்பங்கு (வாமனபுரம்), (+91) 472 2837005
    111 வேங்கோடு வேங்கோடு நெய்யாற்றங்கரை கேரளா கிளைப்பங்கு (உண்டென்கோடு)
    112 தூங்கம்பாறை தூங்கம்பாறை நெய்யாற்றங்கரை கேரளா (+91) 471 2291293
    113 வழிச்சல் வழிச்சல் நெய்யாற்றங்கரை கேரளா (+91) 471 2245140
    114 புதென்விழா அட்டுப்புறம் நெய்யாற்றங்கரை கேரளா கிளைப்பங்கு (அட்டுப்புறம்)
    115 குன்னம்விழா வளத்தங்கரை நெய்யாற்றங்கரை கேரளா கிளைப்பங்கு (வளத்தங்கரை), (+91) 471 2236165
    116 கோட்டமம் கோட்டமம் நெய்யாற்றங்கரை கேரளா ...
    117 அய்யம்பாறை அய்யம்பாறை பாலா கேரளா (+91) 4822 281300
    118 செம்பிலாவு செம்பிலாவு பாலா கேரளா (+91) 4822 254167
    119 பிரவோம் பிரவோம் பாலா கேரளா (+91) 4852 242481
    120 ஆலத்தூர் ஆலத்தூர் பாலக்காடு கேரளா (+91) 4922 224097
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    121 தோனிகுண்டு தோனிகுண்டு பாலக்காடு கேரளா ...
    122 கரும்பா கரும்பா பாலக்காடு கேரளா (+91) 4924 240248
    123 பூஞ்சோல பூஞ்சோல பாலக்காடு கேரளா (+91) 4924 238324
    124 மெழுவேலி (மே) மெழுவேலி (மே) பத்தனம்திட்டை கேரளா (+91) 468 2364265
    125 முறிஞ்சகல் முறிஞ்சகல் பத்தனம்திட்டை கேரளா (+91) 4682 397352
    126 ஊனுகள் ஊனுகள் பத்தனம்திட்டை கேரளா (+91) 468 2258758
    127 பம்பவாலே பம்பவாலே பத்தனம்திட்டை கேரளா ...
    128 ஆஞ்சல் (ஆனபுழக்கல்) ஆஞ்சல் (ஆனபுழக்கல்) (1922) புனலூர் கேரளா (+91) 475 2273661
    129 கொழுவல்லூர் கொழுவல்லூர் (1930) புனலூர் கேரளா ...
    130 குன்னிக்கோடு குன்னிக்கோடு (1996) புனலூர் கேரளா (+91) 94469 73098
    131 வெள்ளிமோன் வெள்ளிமோன் கொல்லம் கேரளா (+91) 474 2547746
    132 கனகன்கலம் கனகன்கலம் சுல்தான்பத்தேரி கேரளா ...
    133 பிரிகுளம் பிரிகுளம் தெள்ளிச்சேரி கேரளா (+91) 467 2254766
    134 சண்டணக்கம்பாறை சண்டணக்கம்பாறை தெள்ளிச்சேரி கேரளா (+91) 460 2215220
    135 கருவஞ்சல் கருவஞ்சல் தெள்ளிச்சேரி கேரளா (+91) 460 2245192
    136 கூத்துபறம்பு கூத்துபறம்பு தெள்ளிச்சேரி கேரளா (+91) 460 2250311
    137 லிஸிகிரி லிஸிகிரி தெள்ளிச்சேரி கேரளா (+91) 460 2231246
    138 மரிகிரி மரிகிரி தெள்ளிச்சேரி கேரளா (+91) 460 2285263, 2284363
    139 வெள்ளரிக்குண்டு வெள்ளரிக்குண்டு தெள்ளிச்சேரி கேரளா (+91) 4672 242595
    140 குமுளி குமுளி தாமரசேரி கேரளா ...
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    141 கோட்டக்கல் கோட்டக்கல் தாமரசேரி கேரளா (+91) 94473 38678
    142 பூதம்பாறை பூதம்பாறை தாமரசேரி கேரளா (+91) 496 2565645
    143 புஷ்பகிரி புஷ்பகிரி தாமரசேரி கேரளா (+91) 495 2277334
    144 கலதிபாடி கலதிபாடி திருவல்லா கேரளா ...
    145 கீச்சல் கீச்சல் திருவல்லா கேரளா (+91) 481 2372597
    146 கோட்டூர் கோட்டூர் திருவல்லா கேரளா ...
    147 மரமொன் மரமொன் திருவல்லா கேரளா ...
    148 ஒத்தேர ஒத்தேர திருவல்லா கேரளா (+91) 469 2656835
    149 எறவு எறவு திருச்சூர் கேரளா (+91) 487 2312016
    150 ஒளறிக்கரை ஒளறிக்கரை திருச்சூர் கேரளா (+91) 487 2360510
    151 ஒருமனையூர் ஒருமனையூர் திருச்சூர் கேரளா (+91) 487 2290211
    152 பொன்னூர் பொன்னூர் திருச்சூர் கேரளா (+91) 487 2285733
    153 பூச்சின்னிப்படம் பூச்சின்னிப்படம் திருச்சூர் கேரளா (+91) 487 2346363
    154 பூமாலை பூமாலை திருச்சூர் கேரளா (+91) 487 2201743
    155 வடூகரை வடூகரை திருச்சூர் கேரளா (+91) 487 3213258
    156 முன்விளை முன்விளை திருவனந்தபுரம் (L) கேரளா (+91) 471 2593158
    157 நேட்டயம் நேட்டயம் திருவனந்தபுரம் (L) கேரளா (+91) 471 2368672
    158 வெள்ளயம்பலம் வெள்ளயம்பலம் திருவனந்தபுரம் (L) கேரளா neyvellayambalamparish@gmail.com, (+91) 471 6002226
    159 அரசம்மூடு அரசம்மூடு திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    160 செறுவலூர் செறுவலூர் திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    161 சிறகுளம் சிறகுளம் திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    162 கடினம்குளம் கடினம்குளம் திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    163 குசவர்கல் குசவர்கல் திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    164 பாண்டா பாண்டா திருவனந்தபுரம் (தெ.) கேரளா (+91) 471 2245484
    165 வள்ளியறுப்பனக்காடு வள்ளியறுப்பனக்காடு திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    166 வெளியன்னூர் வெளியன்னூர் திருவனந்தபுரம் (தெ.) கேரளா ...
    167 வேங்கோடு வேங்கோடு திருவனந்தபுரம் (தெ.) கேரளா (+91) 471 2427510
    168 விளக்குப்பற விளக்குப்பற திருவனந்தபுரம் (தெ.) கேரளா (+91) 475 2023755
    169 பணயிக்குளம் பணயிக்குளம் வராப்பொழி கேரளா (+91) 484 2513002
    170 பொற்றக்குழி பொற்றக்குழி வராப்பொழி கேரளா (+91) 484 2531494
    171 எலிக்குளம் எலிக்குளம் (1926) விஜயபுரம் கேரளா (+91) 482 2225894
    172 கந்தலூர் கந்தலூர் (1955) விஜயபுரம் கேரளா (+91) 4865 246260
    173 காட்டம்பக் காட்டம்பக் (1928) விஜயபுரம் கேரளா (+91) 4829 263711
    174 கோழிபில்லி கோழிபில்லி (1927) விஜயபுரம் கேரளா (+91) 485 2862863
    175 மடத்தும்பாகும் மடத்தும்பாகும் (1934) விஜயபுரம் கேரளா (+91) 469 2665756
    176 ரன்னி ரன்னி (1934) விஜயபுரம் கேரளா (+91) 4735 225862
    177 வனவத்துக்கரை வனவத்துக்கரை (1938) விஜயபுரம் கேரளா (+91) 479 2426771
    178 பக்கில் பக்கில் விஜயபுரம் கேரளா (+91) 481 2362496
    179 ஏலாபெட்டி ஏலாபெட்டி (1932) விஜயபுரம் கேரளா ...
    180 கோசிகலான் கோசிகலான் ஆக்ரா உத்திரபிரதேசம் (+91) 566 2232199
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    181 ஜோத்பூர் ஜோத்பூர் (1936) அஜ்மீர் இராஜஸ்தான் (+91) 291 2432371
    182 ஜெய்சல்மேர் ஜெய்சல்மேர் அஜ்மீர் இராஜஸ்தான் (+91) 2992 252713
    183 லாட்புரா லாட்புரா அஜ்மீர் இராஜஸ்தான் (+91) 145 2787237
    184 தெரெசாப்பூர் தெரெசாப்பூர் அலகாபாத் உத்திரபிரதேசம் (+91) 5443 229410
    185 துர்காபூர் துர்காபூர் அசன்சோல் மேற்கு வங்காளம் llancy@rediffmail.com, (+91) 343 2005006
    186 கன்னாட் கன்னாட் அவுரங்காபாத் மஹாராஷ்ட்ரா ...
    187 குல்மா குல்மா பக்டோக்ரா மேற்கு வங்காளம் (+91) 353 2577107
    188 JC ரோடு JC ரோடு பெங்களூர் கர்நாடகா (+91) 080 22238948
    189 கோத்தனூர் கோத்தனூர் பெங்களூர் கர்நாடகா littleflowerchurch99@gmail.com, (+91) 80 26582758
    190 ராபர்ட்சன்பேட்டை ராபர்ட்சன்பேட்டை பெங்களூர் கர்நாடகா ...
    191 தெரெசாபுரா தெரெசாபுரா பெங்களூர் கர்நாடகா (+91) 80 27501588
    192 கத்கோடம் கத்கோடம் பரேலி உத்தரகண்ட் (+91) 5946 266806
    193 மீர்கஞ்ச் மீர்கஞ்ச் பரேலி உத்திரபிரதேசம் (+91) 581 2565596
    194 பாசண்டி பாசண்டி பருய்பூர் மேற்கு வங்காளம் ...
    195 சிறுகுப்பா சிறுகுப்பா (1975) பெல்லாரி கர்நாடகா (+91) 8396 220728
    196 இச்சிலம்பாடி இச்சிலம்பாடி பெல்தங்கடி கர்நாடகா ...
    197 சத்ரபூர் சத்ரபூர் பெர்ஹாம்பூர் ஒரிசா (+91) 6811 262499
    198 கொட்டம கொட்டம பெர்ஹாம்பூர் ஒரிசா ...
    199 முனிகுடா முனிகுடா பெர்ஹாம்பூர் ஒரிசா (+91) 6863 245503
    200 கர்ஹி கர்ஹி பகல்பூர் ஜார்கண்ட் ...
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    201 கட்டோரியா கட்டோரியா பகல்பூர் பீகார் ...
    202 குசும்பா குசும்பா பகல்பூர் ஜார்கண்ட் ...
    203 மாணிக்பதன் மாணிக்பதன் பகல்பூர் ஜார்கண்ட் ...
    204 அஷ்டா அஷ்டா போபால் மத்தியபிரதேசம் (+91) 7560 242510
    205 ஸ்ரீநகர் ஸ்ரீநகர் (1976) பிஜ்னோர் உத்தரகண்ட் (+91) 1346 251451
    206 பந்த்ரா (மே) பந்த்ரா (மே) மும்பை மஹாராஷ்ட்ரா bandratheresa@mtnl.net.in, (+91) 22 2640789
    207 ஐரோலி ஐரோலி மும்பை மஹாராஷ்ட்ரா airolichurch@gmail.com, (+91) 22 27605418
    208 தெரெசாபுரா தெரெசாபுரா சிக்மகளூர் கர்நாடகா (+91) 8267 213067
    209 ப்ரோடதூர் ப்ரோடதூர் கடப்பா ஆந்திரப்பிரதேசம் (+91) 8564 257503
    210 கலிம்போங் கலிம்போங் டார்ஜீலிங் மேற்கு வங்காளம் (+91) 3552 255693
    211 சொனடா சொனடா டார்ஜீலிங் மேற்கு வங்காளம் pkg_martin_sdbn@yahoo.com, (+91) 354 2466371
    212 புஷ்ப் விஹார் புஷ்ப் விஹார் (1975) டெல்லி புதுடில்லி (+91) 11 29564102
    213 டிக்போய் டிக்போய் திப்ருகர் அசாம் (+91) 3751 265333
    214 கோலகட் கோலகட் திப்ருகர் அசாம் (+91) 3774 280809
    215 ஹன்திஹா ஹன்திஹா டும்கா ஜார்கண்ட் ...
    216 டோரை டோரை டும்கா ஜார்கண்ட் ...
    217 ஏலூரு ஏலூரு ஏலூரு ஆந்திரப்பிரதேசம் (+91) 8812 223261
    218 லடோ சாறை லடோ சாறை (1999) ஃபரிதாபாத் புதுடில்லி littleflowerchurch@gmail.com, (+91) 11 29522016
    219 பன்சி பன்சி (2010) கோரக்பூர் உத்திரபிரதேசம் (+91) 99845 28310
    220 சணர்கட்டி சணர்கட்டி கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 97211 33396
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    221 சர்க்கவான் சர்க்கவான் (1945) கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 551 2501815
    222 டெஓரியா டெஓரியா கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 5568 241078
    223 கிடா கிடா (2003) கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 551 2580229
    224 ஹரையா ஹரையா (2003) கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 5546 233992
    225 ஜங்கிள் சிக்ரி ஜங்கிள் சிக்ரி (2002) கோரக்பூர் உத்திரபிரதேசம் (+91) 551 2272428, 94536 07190
    226 கல்வாரி கல்வாரி (1993) கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 5542 2277304
    227 மஹாராஜகன்ஜ் மஹாராஜகன்ஜ் (1995) கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 5523 222391
    228 சலம்பூர் சலம்பூர் கோரக்பூர் உத்திரபிரதேசம் மிஷன் நிலையம், (+91) 5566 221961
    229 சின்சோலி சின்சோலி குல்பர்கா கர்நாடகா (+91) 94497 73737
    230 டும்பெர்பத் டும்பெர்பத் கும்லா ஜார்கண்ட் (+91) 94307 30205
    231 சிலகாலுரிபேட் சிலகாலுரிபேட் குண்டூர் ஆந்திரப்பிரதேசம் (+91) 8647 253147
    232 சங்கர்தேவ் நகர் சங்கர்தேவ் நகர் குவாஹாத்தி அசாம் sts_morigaon@sify.com, (+91) 3678 2411104
    233 படர்வேஸ் படர்வேஸ் குவாலியர் மத்தியபிரதேசம் (+91) 7495 245701
    234 சட்ரா சட்ரா ஹசரிபாக் ஜார்கண்ட் (+91) 94311 55657
    235 தண்டோக்ஹுர்ட் தண்டோக்ஹுர்ட் ஹசரிபாக் ஜார்கண்ட் (+91) 91627 41723
    236 சனத் நகர் சனத் நகர் ஹைதராபாத் ஆந்திரப்பிரதேசம் st.theresasparishchurch@gmail.com, +91 40 23701253
    237 துஐடெண்பாய் துஐடெண்பாய் இம்பால் மணிப்பூர் (+91) 98956 52253
    238 புஷ்பா நகர் புஷ்பா நகர் இந்தூர் மத்தியபிரதேசம் jrthanku@rediffmail.com, (+91) 731 2561359
    239 டப்பா டப்பா இந்தூர் மத்தியபிரதேசம் ...
    240 நைன்பூர் நைன்பூர் ஜபல்பூர் மத்தியபிரதேசம் (+91) 7646 200402
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    241 சுறு சுறு ஜெய்ப்பூர் இராஜஸ்தான் (+91) 1562 256091
    242 ஹனுமன்கர்ஹ் ஹனுமன்கர்ஹ் ஜெய்ப்பூர் இராஜஸ்தான் (+91) 1552 269455
    243 சுன்சுனூ சுன்சுனூ ஜெய்ப்பூர் இராஜஸ்தான் (+91) 1592 512103
    244 அர்னியா அர்னியா ஜம்மு-ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர் (+91) 1923 272304
    245 லகான்பூர் (கதுவா) லகான்பூர் (கதுவா) ஜம்மு-ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர் ...
    246 உதம்பூர் உதம்பூர் ஜம்மு-ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர் ...
    247 ஜஹிங்க்பனி ஜஹிங்க்பனி ஜாம்ஷெட்பூர் ஜார்கண்ட் ...
    248 சின்றி சின்றி ஜாம்ஷெட்பூர் ஜார்கண்ட் (+91) 326 2245723
    249 டருபிஸ டருபிஸ ஜஷ்பூர் சட்டிஸ்கர் ...
    250 டருபிஸ டருபிஸ ஜஷ்பூர் சட்டிஸ்கர் ...
    251 சிண்ட்வஹா சிண்ட்வஹா ஜஹன்சி உத்திரபிரதேசம் (+91) 5172 294007
    252 ஜோவாய் ஜோவாய் திருத்தலம் ஜோவாய் மேகாலையா principalmarianhilljowai@gmail.com, (+91) 3652 224033
    253 தரிவால் தரிவால் ஜலந்தர் பஞ்சாப் (+91) 1874 277088
    254 ஃபாசில்கா ஃபாசில்கா ஜலந்தர் பஞ்சாப் (+91) 1638 262432
    255 குரு ஹர் சாஹே குரு ஹர் சாஹே ஜலந்தர் பஞ்சாப் (+91) 1685 211011
    256 ஸ்ரீ முக்ட்சர் சாஹிப் ஸ்ரீ முக்ட்சர் சாஹிப் ஜலந்தர் பஞ்சாப் (+91) 1633 266654
    257 நந்த சயூர் நந்த சயூர் ஜலந்தர் பஞ்சாப் (+91) 1882 268666
    258 சக்கல சக்கல கல்யாண் மஹாராஷ்ட்ரா jisjose.mangaly@gmail.com, (+91) 22 28381270
    259 டாஹிசார் டாஹிசார் கல்யாண் மஹாராஷ்ட்ரா bchittila@yahoo.co.in, (+91) 22 28124422
    260 கண்டிவலி (மே) கண்டிவலி (மே) கல்யாண் மஹாராஷ்ட்ரா bentntfr@hotmail.com, (+91) 22 28619457
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    261 மகாத்மா நகர் மகாத்மா நகர் கல்யாண் மஹாராஷ்ட்ரா (+91) 94227 47197
    262 நெரூல் நெரூல் கல்யாண் மஹாராஷ்ட்ரா jintomichael84@gmail.com, (+91) 22 27723274
    263 க்ஹெட் க்ஹெட் கல்யாண் மஹாராஷ்ட்ரா (+91) 2356 264493
    264 குண்டல்வாடி குண்டல்வாடி கல்யாண் மஹாராஷ்ட்ரா (+91) 2329 234480
    265 பெரொல்லி-நகரே ஹடின்பால் கார்வார் கர்நாடகா (+91) 94499 52809
    266 கல்லுரு கல்லுரு கம்மம் ஆந்திரப்பிரதேசம் (+91) 8744 279442
    267 சிக்லியா சிக்லியா கண்டவா மத்தியபிரதேசம் (+91) 7284 280041
    268 ரோஷ்ணி ரோஷ்ணி கண்டவா மத்தியபிரதேசம் (+91) 7328 283410
    269 விஜயகிரி விஜயகிரி குந்தி ஜார்கண்ட் georgekerketta@yahoo.com, (+91) 94311 06878
    270 அவுரங்காபாத் அவுரங்காபாத் லக்னோ உத்திரபிரதேசம் (+91) 92354 81847
    271 சண்டிலா சண்டிலா லக்னோ உத்திரபிரதேசம் (+91) 5854 271146
    272 நிட்டோடி நிட்டோடி (1925) மங்களூர் கர்நாடகா info@noddodichurch.com, (+91) 8258 265260
    273 மோடிநகர் மோடிநகர் மீரட் உத்திரபிரதேசம் (+91) 1232 247510
    274 டொட்டறயபேட் டொட்டறயபேட் மைசூர் கர்நாடகா (+91) 94800 84989
    275 மைசூர் (தெ) மைசூர் (தெ) மைசூர் கர்நாடகா (+91) 821 2480735
    276 பெட்டல் பெட்டல் நாக்பூர் மத்தியபிரதேசம் ...
    277 மன்சர் மன்சர் நாக்பூர் மஹாராஷ்ட்ரா (+91) 7114 268112
    278 ஷிர்ப்பூர் ஷிர்ப்பூர் நாசிக் மஹாராஷ்ட்ரா (+91) 2563 255561
    279 அட்மகுர் அட்மகுர் நெல்லூர் ஆந்திரப்பிரதேசம் (+91) 8627 220007
    280 சிந்தரெட்டிபலம் சிந்தரெட்டிபலம் நெல்லூர் ஆந்திரப்பிரதேசம் ...
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    281 ஓங்கோல் ஓங்கோல் நெல்லூர் ஆந்திரப்பிரதேசம் (+91) 859 2232286
    282 குருவார் பேத் குருவார் பேத் பூனா மஹாராஷ்ட்ரா thresachurch@gmail.com, (+91) 20 24472925
    283 கோபால்பூர் கோபால்பூர் பூர்ணியா பீகார் ...
    284 அமலிடிஹ அமலிடிஹ ராய்ப்பூர் சட்டிஸ்கர் (+91) 771 2411565
    285 நந்தினி நந்தினி ராய்ப்பூர் சட்டிஸ்கர் ...
    286 புஷ்பா நகர் புஷ்பா நகர் சாகர் மத்தியபிரதேசம் (+91) 7481 221369
    287 சில்வாணி சில்வாணி சாகர் மத்தியபிரதேசம் (+91) 7484 240410
    288 மெக்ஹ்பல் மெக்ஹ்பல் சம்பல்பூர் ஒரிசா fr.cypriantopno@gmail.com, (+91) 6681 211211
    289 தேவாரா தேவாரா சட்னா மத்தியபிரதேசம் (+91) 7672 276621
    290 திகம்கர் திகம்கர் சட்னா மத்தியபிரதேசம் (+91) 7683 247170
    291 மாவினகெரே மாவினகெரே ஷிமோகா கர்நாடகா மிஷன் நிலையம்
    292 ஷிகரிபுரா ஷிகரிபுரா ஷிமோகா கர்நாடகா மிஷன் நிலையம், (+91) 8187 222643
    293 பஞ்சகுல பஞ்சகுல சிம்லா & சண்டிகர் பஞ்சாப் (+91) 172 2773777, 2576674
    294 சாங்கிருர் சாங்கிருர் சிம்லா & சண்டிகர் பஞ்சாப் (+91) 1672 251777
    295 ராஜம் ராஜம் ஸ்ரீகாகுளம் ஆந்திரப்பிரதேசம் ...
    296 ரணஸ்தலம் ரணஸ்தலம் ஸ்ரீகாகுளம் ஆந்திரப்பிரதேசம் ...
    297 அம்பகன் அம்பகன் தேஜ்பூர் அசாம் (+91) 94350 81623
    298 டாடெங்கிரி டாடெங்கிரி டுரா மேகாலையா (+91) 3650 262207
    299 மஸ்கா மஹரி மஸ்கா மஹரி உதய்பூர் இராஜஸ்தான் (+91) 2965 252331
    300 கெம்மன்னு கெம்மன்னு (1938) உடுப்பி கர்நாடகா (+91) 820 2546112
    வ.எண் இடம் பங்கு மறைமாவட்டம் மாநிலம் குறிப்பு
    301 கேரா கேரா (2014) உடுப்பி கர்நாடகா (+91) 99451 83225
    302 முகமார் முகமார் (1982) உடுப்பி கர்நாடகா (+91) 8258 268150
    303 ஜம்பவான் ஜம்பவான் வாரணாசி உத்திரபிரதேசம் (+91) 5491 257422
    304 அறுகோலனு அறுகோலனு விஜயவாடா ஆந்திரப்பிரதேசம் (+91) 8676 288251
    305 பாமர்ரு பாமர்ரு விஜயவாடா ஆந்திரப்பிரதேசம் ...
    306 தெரெசா நகர் தெரெசா நகர் விஜயவாடா ஆந்திரப்பிரதேசம் (+91) 94413 69859
    307 பெட்டபடதேபள்ளி பெட்டபடதேபள்ளி விசாகப்பட்டணம் ஆந்திரப்பிரதேசம் (+91) 8932 225502
    308 சலூர் சலூர் விசாகப்பட்டணம் ஆந்திரப்பிரதேசம் (+91) 8964 242746

    குறிப்பு: கிறிஸ்துவில் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, எமது ஆலயம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் ஒருசமயம் தங்களது ஆலயம் கூட புனித குழந்தை இயேசுவின் தெரசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்து குறிப்பிடாமல் விடுபட்டிருந்தால், சிரமம் பாராமல் info@thereseofkandanvilai.info என்ற மினஞ்சல் மூலமாகவோ அல்லது எமது ஆலய இணையதள கருத்து பதிவின் மூலமாகவோ தங்களின் ஆலய முகவரியை (இணையதளம் இருந்தால் அதுகூட) தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

st.therese
© காப்புரிமை 2018. Kandanvilai.info. அனைத்து உரிமைகளும் முன்பதிவு செய்யப்பட்டவை.