St.Therese

Church Photo

செய்திகள் தற்பொழுது ஏதுமில்லை...!

செய்தி & நிகழ்ச்சிகள்
  • திருப்பலி

    திருப்பலி அல்லது பலிப்பூசை (Holy Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம் ஆகும். இதை இயேசு கிறிஸ்துவின் கல்வாரிப் பலியின் (சிலுவை மரணம்) மறு-நிகழ்வாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகிறோம். திருப்பலி வழிபாடு இரண்டு வழிபாட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகியவை ஆகும்.

    தொடக்கச் சடங்கு: வருகை பவனி, தொடக்க வாழ்த்து - தூண்டுதல் உரை, மனத்துயர் முயற்சி, வானவர் கீதம் (குறிப்பிட்ட நாட்களில் மட்டும்), சபை மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    இறைவாக்கு அறிவிப்பு: முதல் வாசகம், பதிலுரைப் பாடல், இரண்டாம் வாசகம் (ஞாயிறு, பெருவிழா நாட்களில் மட்டும்), நற்செய்திக்கு முன் (அல்லேலூயா) வாழ்த்தொலி, நற்செய்தி வாசகம், மறையுரை, விசுவாச அறிக்கை (ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மட்டும்), இறைமக்கள் மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    நற்கருணை கொண்டாட்டம்: காணிக்கை பவனி, அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுத்தல், நற்கருணை மன்றாட்டு, நற்கருணை எழுந்தேற்றம், இறுதிப் புகழுரை, இயேசு கற்பித்த செபம், சமாதான வாழ்த்து, அப்பம் பிடுதல், நற்கருணைத் திருவிருந்து, நன்றி மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    முடிவுச் சடங்கு: அறிவிப்புகள் (முக்கிய நாட்களில் மட்டும்), வாழ்த்து ஆசீர், பிரியா விடை, முடிவு பவனி ஆகியவற்றை உள்ளடக்கியது.


  • திருப்பலி நேரங்கள்:

    ஞாயிறு:

    காலை 5:30: தமிழ் திருப்பலி, புனித அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு

    காலை 6:30: தமிழ் திருப்பலி, புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை

    காலை 7:00: தமிழ் திருப்பலி, புனித குழந்தை திரேசாள் ஆலயம், கண்டன்விளை

    காலை 9:00: தமிழ் திருப்பலி, புனித தோமையார் ஆலயம், இரணியல்

    பிற்பகல் 2:30: மறைக்கல்வி, புனித குழந்தை திரேசாள் ஆலயம், கண்டன்விளை

    பிற்பகல் 3:30: திருஜெபமாலை, தொடர்ந்து நற்கருணை ஆசீர்

  • திங்கள் - சனி:

    காலை 6:15: தமிழ் திருப்பலி, புனித குழந்தை திரேசாள் ஆலயம், கண்டன்விளை

    மாலை 6:30: திருஜெபமாலை

  • தினசரி திங்கள்: (புனித அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு)

    மாலை 6:15: திருஜெபமாலை, தொடர்ந்து தமிழ் திருப்பலி

  • தினசரி செவ்வாய்: (புனித தோமையார் ஆலயம், இரணியல்)

    மாலை 6:15: திருஜெபமாலை, தொடர்ந்து தமிழ் திருப்பலி

  • தினசரி புதன்: (புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை)

    மாலை 6:15: திருஜெபமாலை, தொடர்ந்து தமிழ் திருப்பலி

  • தினசரி வியாழன்: (புனித குழந்தை திரேசாள் ஆலயம், கண்டன்விளை)

    மாலை 6:15: திருஜெபமாலை

    மாலை 6:30: குணப்படுத்தும் ஜெபம், ஆசி வழங்குதல் தொடர்ந்து தமிழில் நவநாள் திருப்பலி


  • சிறப்புத் திருப்பலிகள்:

    1. தினசரி வெள்ளி: (ஜெபமாலைமலை சிற்றாலயம்)

    காலை 11:00 : ஜெபமாலை, தொடர்ந்து தமிழில் சிறப்புத் திருப்பலி

    2. மாதத்தின் முதல் சனி: (ஜெபமாலைமலை சிற்றாலயம்)

    காலை 6:15: தமிழில் திருப்பலி

    3. மாதத்தின் இரண்டாம் சனி: (புனித குழந்தை திரேசாள் ஆலயம், கண்டன்விளை)

    காலை 6:15: திருமுழுக்கு மற்றும் தமிழில் திருப்பலி

    4. பெப்ரவரி 11 - புனித லூர்து அன்னைத் திருவிழா:

    மாலை 6:15: திருஜெபமாலை, தொடர்ந்து மெழுகுத்திரி பவனி

    மாலை 6:45: தமிழ் திருப்பலி, புனித லூர்து அன்னை கெபி

    5. அக்டோபர் 1 - புனித குழந்தை திரேசாள் திருவிழா மற்றும் ஆலயப் பெருவிழா:

    செப்டம்பர் - அக்டோபர் வரை பத்து நாட்கள் திருவிழா சிறப்பிக்கப்படுகிறது

    6. டிசம்பர் 8 - புனித அமலோற்பவ அன்னைத் திருவிழா:

    மாலை 6:15: திருஜெபமாலை, தொடர்ந்து மெழுகுத்திரி பவனி

    மாலை 6:45: தமிழ் திருப்பலி, புனித லூர்து அன்னை கெபி


st.therese
© காப்புரிமை 2017. Kandanvilai.info. அனைத்து உரிமைகளும் முன்பதிவு செய்யப்பட்டவை.