STCK : புனித தெரேசா

புனித தெரேசா பற்றி...

(புனித தெரேசாவின் வாழ்க்கைக் குறிப்புகள்)

புனித தெரேசாவின் பிறப்பு

தெரேசா மார்டின், பிரான்ஸ் நாட்டிலுள்ள அலன்சோன் என்னும் நகரில் 1873 - ஆம் ஆண்டு தம் பெற்றோருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். அவருடைய தந்தை லூயி தனிஸ்லாஸ் மார்டின்; கடிகாரம் செய்யும் தொழிலையும் நகை வியாபாரம் செய்யும் தொழிலையும் சிறப்பாகச் செய்து வந்தார். அவரது அன்னை செலிகெரின் தரமான லேஸ் தயாரிக்கும் குடிசைத் தொழிலைச் செய்து வந்தார். தொடக்கத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட தரமான லேசினால் இந்நகரம் பெயர்பெற்று விளங்கியது (எல்லோருக்கும் தெரிய வந்தது). தெரேசாவின் உடன்பிறந்தோரில் நான்குபேர் இளம் வயதிலேயே இறந்து விட்டனர். ஏனைய ஐந்து பெண் குழந்தைகளும் இறைபணிக்காகத் தம்மையே அர்பணித்து துறவற இல்லம் புகுந்தனர். புனிதத்தன்மைக்கான அவர்களது அழைத்தல் மிகவும் ஆழமானது. அவர்களில் நான்குபேர் கார்மல் துறவற சபையிலும் ஒருவர் மினவுதல் சபையிலும் இணைந்தனர்.


என்றும் சிறுமியே (குழந்தை பருவம்)

தெரேசா துறவியாகவோ புனிதையாகவோ இருந்ததில்லை. உணர்வுத்திறன் மிகுதியாக உள்ள மிகவும் சாதாரணமான ஒரு சிறுமியாகவே இருந்தாள். உண்மையிலேயே அவள் செல்லம் காட்டி கெட்டுப்போன சிறுமியாகவே இருந்தாள். தமது விருப்பம் நிறைவேறாத வேளையில், பிடிவாத குணமும் காரணமின்றி கோபம்கொள்பவளாகவும் விளங்கினாள். நான்கு வயதில் தன் அன்னையின் இறப்புக்குப் பின் அவளது தந்தை "என் சின்ன ராணி" என அழைத்து அவளை மகிழ்ச்சிப்படுத்த அவள் விரும்புவதையெல்லாம் கொடுத்து வந்தார். லூயிமார்டின் தன் பெண்மக்களுக்கு பாதுகாப்பாளராக இருந்தார். செய்தித்தாள் வாசித்தால் அது அவர்களை உலகப்பற்றுடையவர்களாக மாற்றி விடும் என்று அஞ்சிய லூயிமார்டின், அவர்களை செய்தித்தாள் வாசிக்க அனுமதிப்பதில்லை. ஆனால், குறும்புத்தனம் மிக்க அச்சிறுமியர் தந்தை தூங்கும்போது செய்தித்தாளைத் திருடிச் சென்று படித்துவிட்டு அவர் தூங்கி எழும்புமுன் கவனமாகக் கொண்டு வைத்துவிடுவர்.


இளம் வயதில் (இளமைப் பருவம்)

இளம் வயதில் இந்த மதிநுட்பம் மிக்க குழந்தை எல்லாவற்றையும் தனக்கு வேண்டுமென விரும்பினாள். அவள் விரும்பிக் கேட்டதைக் கூடுதலாகப் பெற்று வந்தாள். பதினொரு வயதில் உடலளவிலும் மனதளவிலும் நோயுற்றிந்தபோது நமது அன்னை மரியின் புன்னகையால் அற்புதமாக நலம் பெற்றாள். 1886 - ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முந்தினநாள் இரவில் தமது 13 - ஆம் வயதில் ஆழமான மனமாற்றத்தை அனுபவித்தாள். கார்மல் துறவற சபையில் நுழைந்தால் முழுமையாக இயேசுவுக்கு தம்மையே அர்பணிக்க முடியும் என்று இறைவன் அழைப்பதை உணர்ந்தாள். ஆனால், அவள் வயதில் மிகவும் இளையவள். தலைமை அன்னையிடமும் ஆன்மகுருவிடமும் விண்ணப்பித்தாள். ஆனால், 16 வயது நிரம்பியபின்தான் துறவறத்தில் இணைத்துக் கொள்வோம் எனக் கூறினார். இந்த பதிலால் திருப்தியடையாத தெரேசாவும் அவள் தந்தையும் ஆயருக்கு விண்ணப்பித்தனர். ஆயரிடமிருந்து பதில் வராமையால் ரோம் நகருக்கு, பங்கிலிருந்து திருப்பயணம் சென்றபோது திருத்தந்தையை நேரில் சந்தித்துத் தமது விண்ணப்பத்தை எடுத்துரைத்தாள்.


தெரேசா - எல்லாம் எனக்கு வேண்டும்

"எனக்கு எல்லாம் (அனைத்தும்) வேண்டும்" என்று தெரேசா எப்பொழுதும் சொல்வாள். வழக்கமாக அவள் அவற்றைப் பெற்றுக் கொள்வாள். உறுதியான விடாப்பிடியான முயற்சி பலனளிக்கும். தெரேசா தம் 15 - ஆம் வயதில் லிசியேவிலுள்ள கார்மல் மடத்தில் நுழைய அனுமதி பெற்றாள். அவளது தந்தை உயிரோடிருக்கும்போதே அவள் தன்னை கார்மல் சபை துறவியாக அர்ப்பணித்துக்கொண்டாள். துறவற அர்பணத்தின் போது அவள் "குழந்தை இயேசுவின் திருமுகத்தின் தெரேசா" என்ற பெயரை எடுத்துக்கொண்டாள். இறையன்புக்கு எப்போதும் திறந்த உள்ளத்தோடு தம்மைக் கையளித்தமையால் தூய ஆவி வல்லமையோடு தெரேசாவிடம் செயல்பட்டார். அருட்பணியாளர் போலவும் நற்செய்திப் பணியாளர் போலவும் செயல்படும் கனவுடன் தன்னுடைய அழைத்தல் வாழ்விலும் திருச்சபையிலும் அவள் போராடிக்கொண்டிருந்தாள். இறுதியில் அன்பே என் அழைத்தல் எனப்புரிந்து கொண்டாள். "கடவுள் அன்புதான் திருச்சபையின் ஆற்றலின் ஊற்றும் மனித இதயங்களுக்கும் விருப்புகளுக்கும் நிறைவளிப்பதும் ஆகும்".


ஓர் எளிய ஆன்மீகத்தை வெளிப்படுத்தினார்

குழந்தைகளைப்போல தன்னம்பிக்கையும் கடவுளில் நம்பிக்கையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் எளிய ஆன்மீகத்தை உருவாக்கினார். அவரது சிறுவழி என்னும் ஆன்மிகம் அசாதாரணமான (அரிய) சிறப்பான செயல்களைச் செய்வதில் அல்ல. ஆனால் வாழ்க்கையிலுள்ள சாதாரண எளிய செயல்களை நன்றாகவும் (சிறப்பாகவும்) பேரன்புடனும் செய்வதாகும். அவர் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார். அவர் நம்பியதும் படிப்பித்ததும் எல்லாமே கடவுளின் அருள்தான் (கொடைதான்) என்பதாகும். உண்மையான அன்போடும் ஆவலோடும் கவனித்தால் கடவுளின் திருமுகத்தையும் அவரது உடனிருப்பையும் எல்லா மனிதரிலும் நமது வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அனுபவிக்க முடியும். நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளில் கடவுள் நம்மை எங்கே வைக்க விரும்புகிறார் என்பதை அறிய நாம் போராடுவதுபோலவே தெரேசாவும் போராடியிருக்கின்றார்.தெரேசாவின் ஆன்மிகம் ஒரு சவாலான ஆன்மிகம். இதுதான் தெரேசாவை எல்லாரும் அறியச் செய்ததும் (ஒளிபெறச் செய்ததும்) திருச்சபையின் மறைவல்லுநர் என அறிக்கையிடச் செய்ததும் ஆகும். அவரது ஆன்மிகம் எளிமையானது சிறியது (குழந்தைத்தனமானது) மிகவும் ஆழமானது. மனித நேயமுடையது. நமது குழம்பிய சிக்கலான நிலையில் ஆறுதல் தரக்கூடியது.


திருச்சபையின் மறைவல்லுநர் எனப் பறைசாற்றப்படுதல்

திருச்சபையின் மறைவல்லுநர் எனப் பறைசாற்றப்படுதல் தாம் அனுபவித்த துன்ப இருளைத் தம் திறமையாலும் பலத்தாலும் பண்படுத்தினார். அனைத்தையும் கடவுளுக்குக் கொடுப்பதில் அவருக்கிருந்த போராட்டத்தை அவரது பாடல்களும் விளையாட்டுகளும் வெளிப்படுத்தின (பிரதிபலித்தன). அவர் எலும்புருக்கி நோயினால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கையில் அவரது அன்பு சரணடைந்தது (சரணாகதியானது). அவரது தலைமைச் சகோதரி அவரது சிந்தனைகளை எழுதி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்; அதுதான், ஓர் ஆன்மாவின் வரலாறு என்ற அவரது சுயசரிதையானது. இவ்வுலக மக்களுக்கு நன்மை செய்வதில் என் விண்ணக வாழ்வைச் செலவிடுவேன் என்ற உறுதிமொழியுடன் தமது 24 - வது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். விண்ணிலிருந்து ரோஜாமலர் மாரி பொழிவேன் என்ற அவளது வாக்குறுதி இன்றுவரையிலும் திருச்சபையில் நிறைவேறுவதை நாம் உணர்கிறோம்.

1925 - ஆம் ஆண்டு தம் 52 - வது வயதில் அவர் திருச்சபையின் புனிதையாக அறிவிக்கப்பட்டார். 1997 அக்டோபர் மாதம் திருத்தந்தை 2 - ஆம் ஜாண்பால், அவரைத் திருச்சபையின் மறைவல்லுநர் எனப் பறைசாற்றினார். ஏனெனில், அவரது ஆன்மீகத்தின் தாக்கமும் சவாலும் மிகப்பலரை இறைமக்களாக்கியது.


முக்கிய நிகழ்வுகளும் அவை நிகழ்ந்த நாட்களும்

நிகழ்வுகள் நடந்த நாட்கள்
பிறப்பு ஜனவரி 2, 1873
தாய் புனித மேரி செலிகெரின் மார்டின்
தந்தை புனித லூயிஸ் மார்டின்
திருமுழுக்கு ஜனவரி 4, 1873
சகோதரிகள் ஐவரும் கன்னியர்கள் கார்மல் சபை (4), மினவுதல் சபை (1)
தாய் புனித மேரி செலிகெரின் மார்டின் மரணம் ஆகஸ்ட் 28, 1877
தந்தை புனித லூயிஸ் மார்டின் மரணம் ஜூலை 29, 1894
அன்னை மரியின் புன்சிரிப்புக் காட்சியும் தெரேசா நலமடைந்ததும் மே 13, 1883
முதல் திருவிருந்து மே 8, 1884
உறுதிபூசுதல் ஜூன் 14, 1884
கிறிஸ்து பிறப்பு விழா மனமாற்றம் டிசம்பர் 25, 1886
திருத்தந்தை 13 - ஆம் சிங்காராயரைச் சந்தித்தால் நவம்பர் 20, 1887
புனிதை கார்மல் சபையில் பிரவேசித்தல் ஏப்ரல் 9, 1888
துறவற அர்ப்பணம் செப்டம்பர் 8, 1890
தெரேசாவின் விண்ணகப் பிறப்பு செப்டம்பர் 30, 1897
நல்லடக்கம் அக்டோபர் 4, 1897
புனிதையின் "ஓர் ஆன்மாவின் வரலாறு" (தன்வரலாற்று நூல்) வெளியீடு செப்டம்பர் 30, 1898
அருளாளர் நிலைக்கு அறிமுகம் (ரோமையில்) ஜூன் 10, 1914
அருளாளர் பட்டம் பெறுதல் (11 - ஆம் பத்திநாதரால்) ஏப்ரல் 29, 1923
புனிதர் நிலைக்கு உயர்த்துதல் மே 17, 1925
மறைபரப்புப்பணி பாதுகாவலியாகப் பிரகடனம் டிசம்பர் 14, 1927
பிரான்சு நாட்டின் 2 - ஆம் பாதுகாவலியாகப் பிரகடனப் படுத்தப்பட்டது மே 3, 1944
விண்ணக வாழ்வின் நூற்றாண்டு நினைவு செப்டம்பர் 30, 1997
திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக பிரகடனம் அக்டோபர் 19, 1997