STCK : பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள்

எமது பங்கில் செயல்படும் பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள்


கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

கத்தோலிக்க திருச்சபையில் செயல்படும் பொதுநிலையினருக்கான திருத்தூதுக் கழகங்களில் மிகத் தொன்மை வாய்ந்தது மாதா சபை என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகமாகும். இது 1563 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 - ஆம் நாள் ஜாண் லெயொனிஸ் என்னும் இயேசு சபை குருவானவரால் உரோமைக் கல்லூரியில் பயின்ற ஏழு மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குழுமங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. கத்தோலிக்க விசுவாசத்திலும் விசுவாச வாழக்கையிலும் பணிவாழ்க்கையிலும் இவர்கள் காட்டிய ஆர்வத்தைக் கொண்ட திருத்தந்தை 13 - ஆம் கிரகோரியார் 1584 - ஆம் ஆண்டு டிசம்பர் 5 - ஆம் நாள் "எல்லாம்வல்ல இறைவனின்" என்னும் திருமடல் மூலம் இச்சபையை அங்கீகரித்தார்.

திருத்தந்தை 12 - ஆம் பயஸ் 1948 - இல் பிஸ்செக்குலாரி என்றத் திருமடலில் மாதா சபை எனக்கு மிகவும் விருப்பமான சபை; இது மாதாவின் அரவணைப்பில் செயல்படும் ஒரு சேவா சங்கம் எனப் புகழ்ந்து கூறினார். 1948 - இல் சபைகளின் எண்ணிக்கை 80,000 ஆக உயர்ந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பெருகியது. கிறிஸ்துவை மையமாகவும் மரியன்னையை மாதிரியாகவும் கொண்டு புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பயிற்சியின் அடிப்படையில் திருச்சபை உணர்வுடன் வாழும் சமூகமே கிறிஸ்தவ வாழ்வு சமூகம். பணியில்லையேல், கிறிஸ்தவ வாழ்வு சமூகம் இல்லை; ஆன்மீகப் பயிற்சியில்லையேல், கிறிஸ்தவ வாழ்வு சமூகம் இல்லை. எனவே, பணியும் ஜெபமுமே கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் அடிப்படை. கோட்டாறு மறைமாவட்டம் கொல்கத்தாவிலிருந்து பிரிந்த 1930 - ஆம் ஆண்டிலேயே இங்கு 12 மாதாசபை குழுமங்கள் செயல்பட்டு வந்துள்ளன. கண்டன்விளை பங்கு காரங்காடு பங்கின் கிளைப்பங்காக இருந்தபோதே 1936 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 - ஆம் நாள் அருட்தந்தை. D.C. ஆன்டனி அவர்களால் அமலோற்பவ மாதசபை என்ற பெயரோடு தொடங்கப்பட்டு இன்று வரையிலும் கிறிஸ்தவ வாழ்வு சமூகம் செயல்பட்டு வருகிறது.


மரியாயின் சேனை

கத்தோலிக்க திருச்சபையில் செயல்படும் திருத்தூதுக்கழகங்களில் மிகப் பெரியது மரியாயின் சேனையாகும். உலகில் எல்லா நாடுகளிலும் பரவியுள்ள மரியாயின் சேனையில் சுமார் 30,00,000 உறுப்பினர்கள் உள்ளனர். 1931 - ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சிறப்பாக செயல்பட்டது. ஆறு திருத்தந்தையர்களால் அங்கீகரிக்கப்பட்டு 2 - ஆம் வத்திக்கான் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டது. உறுப்பினர்களையும் புனிதப்படுத்துவதுடன் வழியாக இறைவனுக்கு மகிமை அளிப்பதுதான் மரியாயின் சேனையின் முதன்மையான நோக்கம். தங்கள் வாழ்வில் ஜெபம் மற்றும் சேவை வழியாக உறுப்பினர்கள் தூய ஆவியின் கருவிகளாக மாறுகின்றனர். நற்செய்தி அறிவிப்பு, பங்கு மக்களை சந்திப்பது, மறையறிவூட்டுதல், புதிதாக திருமுழுக்குப் பெற்றவர்களைச் சந்திப்பது, பங்கு சமூகத்தின் பிற ஆன்மீகத் தேவைகளை நிறைவுச் செய்தல் முதலியன அவர்களுடைய சில பணிகளாகும்.

மரியாயின் சேனையினர் எப்பொழுதும் அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஓர் ஆன்ம இயக்குநரின் வழிகாட்டலில் செயல்படுவர். மரியாயின் சேனையினர், பங்குத்தந்தையின் இதயம் மற்றும் கரங்களின் விரிவாக்கமாகச் செயல்படுவர். உறுப்பினர் வாரத்திற்கு ஒருமுறை குடும்பச் சூழலில் ஜெபிக்கவும், உரையாடவும், திட்டமிடவும் கூடுவர். தங்கள் ஆன்ம இயக்குநரின் வழிகாட்டலில் வாரம் தோறும் குறைந்தது 2 மணி நேரமாவது குறிக்கப்பட்ட சேவையை இருவர் இருவராகச் சென்று செய்வர். தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பிரமாணிக்கமாக வாழும் அனைவரும் மரியாயின் சேனையில் உறுப்பினராகத் தங்களை இணைத்துக் கொண்டு திருச்சபையின் அப்போஸ்தலர் பணியில் பங்குகொள்ள ஆர்வம் கொண்டுள்ள அனைவரும், மரியாயின் சேனையில் உறுப்பினர் ஆற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற தயாராக இருக்கும் அனைவரும் மரியாயின் சேனை உறுப்பினராகலாம். கண்டன்விளை பங்கின் முதல் பிரசீடியம் ஆண்டுகளுக்காகத் தொடங்கப்பட்ட விண்ணரசி பிரசீடியம் ஆகும்.


விண்ணரசி பிரசீடியம்

விண்ணரசி பிரசீடியமானது, பங்கில் வயதானவர்களுக்காக முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

பக்த சபைகள்

திருச்சபையைக் கடவுளின் ஆவிக்கும் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப கட்டிக்காக்கவும் திருச்சபையின் வாழ்வும் பணியும் ஜெபத்தில் ஊன்றியிருக்கச் செய்யவும் ஆன்மீகக் குழுக்கள் சிறந்த கருவிகளாகும்.

 • கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
 • இயேசுவின் திரு இருதய சபை
 • புனித ஃபிரான்சிஸ்கன் 3 - ஆம் சபை
 • சிறுவழி இயக்கம்
 • மறைக்கல்வி மன்றம்

 • இளைஞர் இயக்கங்கள்

 • கத்தோலிக்க சங்கம்
 • அன்னை தெரசா நற்பணிமன்றம்
 • கத்தோலிக்க சேவா சங்கம்
 • புனித வின்சென்ட் தே-பவுல் சங்கம்
 • இளங்கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

 • மற்ற இயக்கங்கள்

 • கோல்ஃபிங் இயக்கம்
 • விவசாயிகள் சங்கம்
 • பெண்கள் இயக்கம்
 • இரு பெண் குழந்தைகள் இயக்கம்
 • மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை நற்பணிமன்றம்
 • புனித தொன்போஸ்கோ நற்பணிமன்றம்
 • அடித்தள முழுவளர்ச்சி சங்கம்