STCK : ஜெபமாலை மலை

ஜெபமாலை மலை சிற்றாலயம்

அருட்தந்தை. பயஸ் J. மோரிஸ் அவர்கள் 14 ஆண்டுகள் (1949 - 1963) வரை கண்டன்விளை பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். அச்சமயம் பங்குக்காகச் சொத்துக்களை வாங்கினார். அந்தந நிலத்தில்தான் தற்போது கைத்தறி நெசவுச் சங்கம் மற்றும் ஜெபமாலை மலை சிற்றாலயம் ஆகியவை எழுப்பப்பட்டுள்ளன. 1968 - இல் அருட்தந்தை. M. மரிய கிரகோரி பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில், ஜெபமாலை மலைக்கு செல்லும் வழிப்பகுதி வாங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை. V. ஹில்லாரியஸ் ஜெபமாலை மலையில் அன்னையின் அழகுறு திருவுருவத்தை அமைத்தார். அருட்தந்தை. B. ரசல்ராஜ் ஜெபமாலை மலைக்கு செல்லும் வழிப்பகுதியில் சிலுவைப்பாதையின் பதிநான்கு நிலைகளையும் நிறுவினார்.

சிலுவைப்பாதை ஸ்தலங்கள்

சிலுவைப்பாதை என்று அழைக்கப்படும் ஆண்டவரின் பாடுகளின் பாதை, நாம் கிறிஸ்துவின் தியாகத்தை நினைத்து ஜெபிப்பதற்கான வழியாகும். இது கிறிஸ்துவுக்கு விதிக்கப்பட்ட அநியாயத் தீர்ப்பிலிருந்து அவருடைய கல்லறை அடக்கம் வரை 14 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு அருட்கருவிகளில் ஒன்றாக இடம் பெற்று, சிறப்பாக தவக்காலத்தில் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள பக்தி முயற்சியாகும்.