STCK : முகப்பு

கண்டன்விளை, புனித குழந்தை தெரேசா ஆலய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!

ஆலயத் திருப்பலி நேரங்கள்

தினசரி திருப்பலிகள்
( வியாழன் தவிர, காலை 6:15 மணி, IST )

வியாழன் நவநாள் திருப்பலி
( மாலை 6:15 மணி, IST ) நேரலை!

ஞாயிறு திருப்பலி
( காலை 7:00 மணி, IST ) நேரலை!

பக்த சபை இயக்கங்கள்

எமது பங்கில், 19 அன்பியங்களும், 18 பக்தசபை இயக்கங்களும், மறைக்கல்வி மன்றமும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

செய்திகள் & நிகழ்ச்சிகள்

  • அன்புள்ள பார்வையாளர்களுக்கு!
    உலகிலேயே, முதன்முதலாக குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்காக அற்பணிக்கப்பட்டக் கண்டன்விளை ஆலயத்தின் நூற்றாண்டுப் பெருவிழாவை, 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தோம். நூற்றாண்டு விழாவுக்கு வருகை தந்து, விழாவை சிறப்பித்த, புனித சிறுமலர் தெரேசாவின் பக்தர்கள் அனைவருக்கும் நன்றி!

    கண்டன்விளை ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், மாலையில் நடைபெறும் நவநாள் திருப்பலி மற்றும், ஞாயிறு காலைத் திருப்பலி இவை இரண்டும், ஆலய வலையொளி (YouTube) வழியாக நேரலை ஒளிப்பரப்புச் செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

    ஆலயத் திருவழிப்பாட்டு நிகழ்வுகளை, உடனுக்குடன் தெரிந்துகொள்ள, கண்டன்விளை ஆலய வலையொளி (YouTube channel) ஊடகம் அல்லது ஆலய இணையதள பக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம். நன்றி!

பழம்பெரும் ஆலய வரலாறு

கண்டன்விளை ஆலயம், குழந்தை இயேசுவின் புனித தெரேசா 1923 - இல் அருளாளர் பட்டம் பெற்றதும் அவருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயமாகும்.

பழம்பெரும் கண்டன்விளை ஆலய வரலாறு, தெளிவாக எழுதப்பட்டு அண்மையில் ஒரு ஆவணக்குறும்படமாக வெளியிடப்பட்டுள்ளது. இது புனித தெரேசாவின் வரலாற்றையும் அதோடு கண்டன்விளை பங்கின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

மேலும் படிக்க

பங்குத்தந்தையின் செய்தி

அன்பிற்கினிய இறைமக்களே!
புனித தெரேசாவுக்காக இந்தியாவில் அற்பணிக்கப்பட்டுள்ள ஆலயங்களுடன் ஒரு புதிய நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

இந்நிலையில், அந்த ஆலயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், பின்வரும் மின்னஞ்சலுக்கு உங்கள் தகவலைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

அருட்பணி. A. மரிய வின்சென்ட் (பங்குத்தந்தை)
மின்னஞ்சல்: info@thereseofkandanvilai

பங்கு அருட்பணிபேரவை

தற்போது அமைந்துள்ள பங்கு அருட்பணிப் பேரவை, 2021 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 மற்றும் 21 - ஆம் தேதிகளில் தேர்தல் முறையில் அமைக்கப்பட்டு 41 உறுப்பினர்களுடன் (பங்குத்தந்தையுடன் சேர்த்து) மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க