STCK : செய்திகள் & நிகழ்ச்சிகள்

சிறுமலர் தெரேசாவின் 150 - வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்!


சிறுமலர் தெரேசாவின் அன்பு பக்தர்களே!

உலகிலேயே முதல்முதலாக சிறுமலர் தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கண்டன்விளை ஆலயத்தின் அன்பு புனிதையின் 150 - வது பிறந்தநாள் விழாவானது, 02.01.2023 (திங்கள்) அன்று மாலை 5:00 மணிக்கு கொடி பவனியுடன் ஆரம்பமாகி, 6:00 மணிக்கு திருஜெபமாலையுடன் துவங்கி, 6:45 மணிக்கு திருப்பலியுடன் நடைபெறுகிறது. அனைவரும் வருகைதந்து, புனிதையின் அருளாசீரை நிரம்பப்பெற்றிட, அன்புடன் அழைக்கிறோம். நன்றி..!

விழா திருப்பலி வழிபாடு நிகழ்வுகள் அனைத்தும், ஆலய வலையொளி (Church YouTube Channel) வழியாக நேரலை ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஆகையால், விழா வழிபாடு நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த நேரலை வசதியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள விழா அழைப்பிதழை கிளிக் செய்து, கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.