STCK : பங்குப்பேரவை

ஆலய பங்கு அருட்பணிப்பேரவை


கண்டன்விளை பங்கின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முழுமுதற்காரணமாக இருப்பவர்கள், இங்கு மிகுந்த அர்ப்பணத்துடன் பணியாற்றும் அருட்தந்தையர்களும் அவர்களுடன் ஒத்துழைத்து செயல்படும் பங்கு அருட்பணி பேரவையும் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

பங்கு அருட்பணிப் பேரவையானது, பங்குத்தந்தை அவர்களை தலைவராகக் கொண்டு பங்கு சார்ந்த எந்தவொரு செயல்பாடு மற்றும் முடிவையும் மேற்கொள்ளும்போது அவர்களுடன் உறுதுணையாக இருந்து மிக நேர்த்தியான பணியைச் செய்கிறது.

கண்டன்விளை ஆலய தற்போதுள்ள பங்கு அருட்பணிப் பேரவை உறுப்பினர்கள், 2024 டிசம்பர், 29 ஆம் தேதியும், பேரவை நிர்வாகிகள், 2025 ஜனவரி, 05 ஆம் தேதியும், தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பங்குத்தந்தை தலைமையில், மொத்தம் 41 உறுப்பினர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பங்கு அருட்பணிப் பேரவை தேர்தல், மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்ற சுழற்சி அடிப்படையில் நடைபெறும்; ஆகவே, பேரவையில் அடங்கியுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மூன்று வருடம் மட்டுமே பேரவை உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியும்.

பங்கில் செயல்படும் அன்பியங்கள், பக்த சபைகள் மற்றும் இயக்கங்களில் உள்ள உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இதன் மூலம், பலதரப்பட்டக் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பேரவை கூட்டங்களில் ஆலோசனைக்குட்படுத்தப்பட்டு பங்கு வளர்ச்சிக்காக செயல் வடிவமாக்கப்படும். பங்கு அருட்பணிப் பேரவை கூட்டம், மாதத்தின் முதல் ஞாயிறு காலை 11:00 மணிக்கு நடைபெறும். மேலும், பேரவையானது பங்கின் கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் அடிப்படையில் இயங்கும்.

புதிதாகத் தேர்வுச் செய்யப்பட்ட பங்கு அருட்பணிப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பட்டியல், விரைவில் வெளியிடப்படும்!